உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆராய்ச்சியாளர்கள் சொன்ன புதிய தகவல்

ஆராய்ச்சியாளர்கள் சொன்ன புதிய தகவல்

ஆராய்ச்சியாளர்கள் சொன்ன புதிய தகவல் சீனாவின் பீஜிங்கில், இந்திய தூதரகம் சார்பில், ராமாயணம்- ஒரு காலமற்ற வழிகாட்டி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மதங்களின் தாக்கங்கள் தொடர்பாக நீண்டகால ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலர், ராமாயணம் சீனாவை அடைந்த வரலாற்று வழிகள் மற்றும் சீனாவின் கலை மற்றும் இலக்கியங்களில் ராமாயணத்தின் தாக்கம் பற்றி விளக்கம் அளித்தனர். பவுத்த நூல்கள் மூலம் சீனாவிலும் பல நூற்றாண்டுகளாக ராமாயணத்தின் தாக்கம் இருப்பதாக கூறினர். இதன் மூலம், சீனாவின் சரித்திர வரலாற்றில் முதல் முறையாக, ஹிந்து மதத்தின் தாக்கத்தை பற்றி வெளிப்படுத்தி உள்ளனர். ஷின்குவா பல்கலைக்கழக சர்வதேச மையத்தின் தலைவர் டாக்டர் ஜியாங் ஜிங்குய் கூறும்போது, இந்தியாவின், குறிப்பாக ஹிந்து மதத்தின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நுாற்றாண்டுகளுக்கு முன், சீனாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக புத்த மத நுால்கள் மூலமாக, ராமாயணம் சீனாவில் அறிமுகமானது. இது, சீனாவின் முக்கியமான ஹான் கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கலாசாரம் குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. ராமாயணத்தில் உள்ள தசரசன், ஹனுமான் ஆகியோரின் பெயர்கள், இந்த கலாசாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜியாங் கூறினார்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ