/ தினமலர் டிவி
/ பொது
/ அமரனுக்கு அண்ணாமலை பாராட்டு; கமல் நன்றி amaran film | kamalhaasan | annamalai k.| Rajkumar Periasamy
அமரனுக்கு அண்ணாமலை பாராட்டு; கமல் நன்றி amaran film | kamalhaasan | annamalai k.| Rajkumar Periasamy
அமரன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியதாவது: ராணுவ வீரர்களின் வீரம், தைரியம், நேர்மையையும், நாட்டை காக்கும் பணியில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்யும்போது அவர்களது குடும்பம் படும் துயரங்களையும் அமரன் படம் விவரிக்கிறது. ராணுவ வீரர்கள் தனித்துவமானவர்கள். பெருமையுடன் சீருடை அணிந்து உயிரை பணயம் வைத்து ஆபத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ராணுவ வீரரின் குடும்பம் வலி வேதனையை பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல காலத்துக்கு நமக்கு உத்வேகம் ஊட்டும்.
நவ 05, 2024