உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது இந்தியாவின் ஒலிம்பிக் கனவு india letter to IOC| 2036 olympics

அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது இந்தியாவின் ஒலிம்பிக் கனவு india letter to IOC| 2036 olympics

அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது இந்தியாவின் ஒலிம்பிக் கனவு india letter to IOC| 2036 olympics உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக், பிரான்ஸ் தலைவர் பாரிசில் நடந்து முடிந்தது. ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சாதித்து வருவதை பெருமையாக பேசும், பிரதமர் மோடி, 2036ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இச்சூழலில், 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அங்குள்ள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஒலிம்பிக் நடத்த அனுமதி கிடைத்தால் இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கனவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா மட்டுமல்ல, மெக்சிகோ, துருக்கி, போலந்து, எகிப்து, இந்தோனேஷியா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதில் தகுதியான நகரை மதிப்பீடு செய்து இறுதி முடிவு எடுக்கும். 2028ம் ஆண்டு ஒலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளது. 2036ல் இந்தியா ஒலிம்பிக் நடத்தும் பட்சத்தில் போட்டிகள் ஆகமதாபாத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை