துணை அதிபர் ஆகிறார் இந்திய வம்சாவளியின் கணவர் US Election| trump| Usha Chilukuri| JD Vance
துணை அதிபர் ஆகிறார் இந்திய வம்சாவளியின் கணவர் US Election| trump| Usha Chilukuri| JD Vance அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டெனால்ட் ட்ரம்ப், தம்மை எதிர்த்து நின்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை வென்றார். அமெரிக்காவின் 47 வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்க எங்களுக்கு இதுவரை இல்லாத மற்றும் சக்திவாய்ந்த வெற்றியை தந்திருக்கிறது என்கூறினார். துணை அதிபர் யார் என்பதை இப்போது நான் சொல்ல முடியும் எனக்கூறிய ட்ரம்ப், ஜேம்ஸ் டேவிட் வான்ஸ்சையும் அவரது மனைவி உஷா சிலுக்குரியையும் மேடையில் அறிமுகம் செய்து பாராட்டினார். ஜே.டி வான்ஸ் பேசும்போது, தம் மீது ட்ரம்ப் வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரவித்து கொண்டார். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மறுபிரவேசத்தை பார்க்கிறோம். இருப்பினும், அதிபர் ட்ரம்ப் தலைமையின் கீழ், அமெரிக்க மக்களுக்காகவும் அவர்களின் கனவுகள், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக போராடுவதை நாங்கள் நிறுத்தப்போவது இல்லை. ட்ரம்ப் தலைமையில் மிகப்பெரிய பொருளாதார மீட்சியை நாம் வழிநடத்த போகிறோம் என்று வான்ஸ் கூறினார். ஒரு காலத்தில் ட்ரம்ப்பை கடுமையாக எதிர்த்தவர் வான்ஸ். முட்டாள், கண்டிக்கத்தக்கவர் என்றெல்லாம் விமர்சித்தவர், 2016க்கு முந்தைய நேர்காணலில் ஹிட்லருடன் ட்ரம்பை ஒப்பிட்டு பேசியவர். அதன் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இப்போது ட்ரம்பின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவராக மாறியிருக்கிறார். ஓஹியோ மாகாணத்தின் செனட்டராக இருந்தவர் வான்ஸ். யேல் சட்டப்பள்ளியில் படிக்கும்போது, வான்ஸ்--உஷா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். துணை அதிபர் ஆகும் வான்ஸ் மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஆந்திராவின் வட்லுரு கிராமம்தான் அவரது மூதாதையர்களின் பூர்விகம். அமெரிக்காவின் வெள்ளையர் அல்லாத முதல் இரண்டாவது பெண்மணி என்ற சிறப்பை பெறவுள்ளார். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்தான். நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் ஆகும் வாய்ப்பை அவர் இழந்த நிலையில், மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளார்.