விடுதலை சிறுத்தைகள் மீது பாமக போலீசில் புகார்! PMK | VCK | Clash | Kadalur
விடுதலை சிறுத்தைகள் மீது பாமக போலீசில் புகார்! PMK | VCK | Clash | Kadalur கடலூர் மாவட்டம் மஞ்சன்கொல்லை கிராமத்தில் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையால் அந்த கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்த விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் போலீசில் புகார் அளித்தனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளிடம், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய விசிகவை சேர்ந்த நீதி வள்ளல், அரங்க தமிழ் ஒளி, அறிவுடைநம்பி, செல்வராணி, தாமரைசெல்வன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென புகாரில் கூறப்பட்டுள்ளது.