உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோந்து சென்ற போலீசாருக்கு நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி man attacks policemen chidambaram

ரோந்து சென்ற போலீசாருக்கு நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி man attacks policemen chidambaram

ரோந்து சென்ற போலீசாருக்கு நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி man attacks policemen chidambaram cuddalore police 2 policemen injured குமராட்சி மேம்பாலம் அருகே ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். வண்டியில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தன. அதுபற்றி போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோதே, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் மாஞ்சா கட்டையை எடுத்து போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் போலீசார் நிலைகுலைந்ததும் அந்த ஆசாமி தப்பி ஓடினான். போலீஸ்காரர் தேவநாதனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஜெயராமனுக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட இருவரும் அவ்வழியாக வந்த பஸ்சில் ஏறி சிதம்பரம் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களை தாக்கிய ஆசாமி கடலூர் நோக்கி செல்வதாக காயமடைந்த போலீசார் கடலூர் எஸ்பி ஆபீசுக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, சுற்று வட்டார காவல் எல்லைகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். கடலூர் அருகே பச்சான் குப்பம் பகுதியில் பைக்கில் வந்த ஆசாமியை போலீசார் மடக்கினர். அவன்தான் போலீசாரை தா்க்கியவன் என்பது உறுதியானது. விசாரணையில், புதுச்சேரி கிழிஞ்சி குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரியவந்தது அவனை கைது செய்து ஜீப்பில் ஏற்றியபோது தப்பி ஓடினான். போலீசார் விரட்டிச் சென்றனர். சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தான். இதில், அவனது கை முறிந்தது வலியால் துடித்த விஸ்வநாதனை கடலூர் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவனுக்கு கட்டுபோடப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் காட்டுமன்னார்கோயில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு விஸ்வநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை