உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாற்று இடத்தில் சத் பூஜை நடத்த டில்லி ஐகோர்ட் அறிவுரை Chhath pooja | Delhi High court order about C

மாற்று இடத்தில் சத் பூஜை நடத்த டில்லி ஐகோர்ட் அறிவுரை Chhath pooja | Delhi High court order about C

மாற்று இடத்தில் சத் பூஜை நடத்த டில்லி ஐகோர்ட் அறிவுரை Chhath pooja | Delhi High court order about Chhath pooja வட மாநிலங்களில் சத் Chhath பூஜை 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புனித நீராடி பக்தர்கள் பூஜை செய்வர். டில்லியில் பாயும் யமுனை நதியில் ஆலைக்கழிவுகள் கலந்து ரசாயன நுரை பொங்க ஓடுகிறது. தண்ணீர் மாசு அடைந்து உள்ளதால், காலிந்தி குஞ்ச் பகுதியில் யமுனையில் நீராட டில்லி அரசு தடை விதித்தது. தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தடையை நீக்க கோர்ட் மறுத்துவிட்டது. மாசடைந்த நதி நீரில் நீராடி வழிபட அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர். டில்லியில் பாயும் யமுனை நதியில் நச்சுக் கழிவுகள் கலந்துள்ளன. ஏற்கனவே அந்த நதி நீரில் குளித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. புனித நீராடவும் வழிபாடு நடத்தவும் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்யும். போலீஸ் பாதுகாப்புடன் அங்கு மக்கள் நீராடி வழிபடலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ