உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை மாலில் நின்ற நடிகை அதிரடி கைது |

சென்னை மாலில் நின்ற நடிகை அதிரடி கைது |

சென்னை மாலில் நின்ற நடிகை அதிரடி கைது | சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மீனா. பிரபல சீரியல் நடிகை. ஒரு சில திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் இன்று சென்னை ராயப்பேட்டை அருகே உள்ள மாலில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அண்ணாசாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் வாட்ஸ் அப் குழு மூலம் நடிகை போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. சினிமா மற்றும் சீரியலில் அடிக்கடி வாய்ப்பு வராததால் பண தேவைக்காக போதை பொருள் விற்றதாகவும் விசாரணையில் கூறி உள்ளார். இவருக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? இந்த விவகாரத்தில் நடிகையுடன் தொடர்பில் இருந்தவர்கள், எத்தனை நாட்களாக இந்த விற்பனை நடக்கிறது என்பது குறித்து விசாரணை தொடர்கிறது. அந்த வாட்ஸ் அப் குழுவில் மொத்த விற்பனையாளர்கள் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சென்னையில் கஞ்சாவை தொடர்ந்து விலை உயர்ந்த போதை பொருட்களான கொக்கைன் , மெத்தபட்டமைன் புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். முக்கிய புள்ளிகளை நெருங்க அதை வாங்கி விற்கும் சப்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வரிசையில் துணை நடிகை, கையும் களவுமாக சிக்கியுள்ள சம்பவம் இன்று அரங்கேறி உள்ளது.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை