உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி கணேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம்; பிரதமர் மோடி | Delhi Ganesh | Actor Delhi Ganesh | PM Modi

டெல்லி கணேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம்; பிரதமர் மோடி | Delhi Ganesh | Actor Delhi Ganesh | PM Modi

டெல்லி கணேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம்; பிரதமர் மோடி | Delhi Ganesh | Actor Delhi Ganesh | PM Modi குணச்சித்திரம், நகைச்சுவை என பன்முகத் தன்மை கொண்ட நடிகரான டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் மறைந்துள்ளார். சென்னையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது. திரை உலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்; புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை கொண்ட டெல்லி கணேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். சிறந்த நடிப்பாற்றல் கொண்டவராக திகழ்ந்தார். அசாத்திய நடிப்பு திறமையால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் கொண்டு வந்த தனித்துவம் தலைமுறைகள் கடந்தும் நினைவில் நிற்கும், பாராட்டப்படுவார். நாடக கலையின் மீதும் டெல்லி கணேஷ் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமரின் இரங்கல் பதிவில் கூறப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல முக்கிய கட்சி தலைவர்களும் டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ