உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா பதுக்கிய 7 பேர் அதிரடி கைது! Raid in Student accommodations | Coimbatore Police | Drug

கஞ்சா பதுக்கிய 7 பேர் அதிரடி கைது! Raid in Student accommodations | Coimbatore Police | Drug

கஞ்சா பதுக்கிய 7 பேர் அதிரடி கைது! Raid in Student accommodations | Coimbatore Police | Drug கோவை புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் அதிகளவில் தங்கி உள்ளனர். அங்கு 400க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொடுப்பதற்காக சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. மேலும் அங்கு கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருந்ததையும் கைப்பற்றினர். விசாரணையில் அவற்றை மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இந்த விவகாரத்தில் அந்த அறையில் தங்கியிருந்த 6 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி போதைப்பொருட்கள் சப்ளை செய்த நபரையும் போலீசார் பிடித்தனர். மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை