உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கமலின் திடீர் முடிவுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணம் | Actor Kamal | Ulaga nayagan|Reason behind

கமலின் திடீர் முடிவுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணம் | Actor Kamal | Ulaga nayagan|Reason behind

உலக நாயகன் பட்டம் தனக்கு வேண்டாம், இனி தன்னை கமல் அல்லது கமல்ஹாசன் என்றே அழைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கமலின் திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூறியதாவது: அமெரிக்காவில் தங்கியிருக்கும் கமல், அங்குள்ள ஹாலிவுட் திரையுலகம் குறித்தும் உச்ச நடிகர்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு குறித்தும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். திரையுலகில் கடந்த 65 ஆண்டுகளாக அவர் செய்த சாதனைகள், உலக அளவில் பெருமை பெற்றுள்ளன. கமல் ஹாலிவுட் சென்றிருந்தால், அவர் தான் நம்பர் 1 நாயகன்; அவர் அங்கு செல்லவில்லை என்றாலும், அவர் தான் உலக நாயகன் என இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சமீபத்தில் பாராட்டினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை. திமுக கூட்டணியில் கமல் இருப்பது தான் காரணம் என்றாலும், கலைத்துறை பிதாமகனாக கருதப்படும் கமலுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். அந்த வருத்தம் கமலுக்கு உண்டு. அதனால் தான், கலைத் துறையில் பெற்ற பட்டமெல்லாம் இனி தேவையில்லை என்ற முடிவை எடுக்க வைத்துள்ளது என கூறியுள்ளனர்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ