இலங்கையை கண்டித்து மீனவ பெண்கள் போராட்டம் Tamil fishermen arrest issue| Rameswaram fishermen strik
இலங்கையை கண்டித்து மீனவ பெண்கள் போராட்டம் Tamil fishermen arrest issue| Rameswaram fishermen strike | Pamban Strike கடந்த 10ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து கைது செய்தது. அந்த பதற்றம் அடங்காத நிலையில், இன்று அதிகாலை நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அடு்த்தடுத்த சம்பவங்களால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கொதித்தெழுந்தனர். பல நாட்களாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்ட 35 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுாற்றுக்கணக்கான மீனவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால், பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் - ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைக்குழந்தைகளுடன் மீனவ பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்தனர். போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை விடுவிக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறியதால் பதற்றம் அதிகரித்தது. மீனவர் பிரச்னை தொடர்பாக முதல்வர், பிரதமரை மீனவ பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்வதாக மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி கூறினர். அதை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.