தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இவ்ளோ தானா?
தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இவ்ளோ தானா? கிண்டி ராஜ்பவனில், பாஞ்சாலங்குறிச்சியின் போர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கவர்னர் ரவி நூலை வெளியிட ராம்கோ சிமென்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி தர்மகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கவர்னர் ரவி உரையாற்றினார். தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர்களின் பட்டியலை தமிழக அரசிடம் கேட்டேன். வெறும் 30 பேர் அடங்கிய பட்டியலை மட்டும் கொடுத்தனர். இவ்வளவுதானா என நினைத்தேன் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பற்றி அறிந்து புத்தம் வெளியிட முடிவு செய்தேன். அதற்காக வெளியில் அதிகம் பேசப்படாத 100 சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஜேம்ஸ் மில் என்பவர் பிரிட்டிஷ் இந்தியா வரலாறு என்ற புத்தகம் எழுதினார். இந்தியாவுக்கே வராத அவர், இந்தியா பற்றி கேவலமாக அதில் எழுதி இருக்கிறார். தெரிந்தே இந்தியா மீது தவறான கண்ணோட்டத்தை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். நம் பெருமைகளை மறைத்தனர். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது. 19ம் நூற்றாண்டை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் குறித்த விவரங்கள் குறைவாக உள்ளன. 20 நூற்றாண்டில் நடந்த விடுதலை போராட்ட நிகழ்வுகள் தெளிவாக இல்லை. மாறாக திராவிட இயக்கங்கள் குறித்த விவரங்கள்தான் அதிகமாக உள்ளன என்று கவர்னர் ரவி கூறினார்.