உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டர்கள் பாதுகாப்பு: ஸ்டாலின் வாக்குறுதி doctor stabbed chennai government hospital

டாக்டர்கள் பாதுகாப்பு: ஸ்டாலின் வாக்குறுதி doctor stabbed chennai government hospital

டாக்டர்கள் பாதுகாப்பு: ஸ்டாலின் வாக்குறுதி doctor stabbed chennai government hospital Dr Balaji Jaganathan Kalaignar Centenary Hospital cm stalin முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜியை, நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு டாக்டர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி