டிரம்பால் போர் முடியுமா? ஜெலென்ஸ்கி சொல்வது என்ன? Ukrainian President | Zelensky
டிரம்பால் போர் முடியுமா? ஜெலென்ஸ்கி சொல்வது என்ன? Ukrainian President | Zelensky|war with Russia |will end soon| Donald Trump|US president. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே, 2022 பிப்ரவரியில் இருந்து போர் நடக்கிறது. இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த போரால் உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிகளை அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அதிபரான 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் அமெரிக்க மக்களுக்கு உறுதி அளித்தார். தேர்தலில் டிரம்ப் பெற்ற வெற்றி, ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் நாடுகளுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி டிரம்புடன் போனில் பேசினார். வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். டிரம்புடன் போன் உரையாடல் குறித்து ஜெலென்ஸ்கி கூறியதாவது. டிரம்ப் உடனான போன் உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. உக்ரைனின் நிலைப்பாட்டுக்கு எதிராக டிரம்ப் எதையும் கேட்கவில்லை. வெள்ளை மாளிகையை வழிநடத்தப் போகும் புதிய அணியின் கொள்கைகளால் போர் முடியும் என்பது உறுதி. அது அவர்களின் அணுகுமுறை மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதி. போர்க்களத்தில் நிலைமை கடினமாக உள்ளது. ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. டிரம்ப் பதவி ஏற்றவுடன் ரஷ்யாவுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என ஜெலென்ஸ்கி கூறினார்.