உ.பி அரசிடம் விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணையம்
உ.பி அரசிடம் விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணையம் உத்தர பிரதேசம் ஜான்சி மாவட்டம், மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் குழந்தைகள் பிரிவில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 10 குழந்தைகள் இறந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஜான்சி கமிஷனர் விபுல் துபே மற்றும் டிஐஜி கலாநிதி நைதானி அடங்கிய குழு ஆய்வு செய்து முதற்கட்ட அறிக்கை தயாரித்துள்ளது. அதில், தீ விபத்துக்கு குற்றவியல் சதியோ, அல்லது தவறான செயல்பாடுகளோ காரணம் இல்லை என கூறப்பட்டுள்ளது. மின் அழுத்தம் காரணமாக, சுவிட்ச் போர்ட்டில் ஏற்பட்ட ஷாட் சர்க்யூட் காரணமாக தீ ஏற்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்களின் பிளாஸ்டிக் உரைகள் மூலமாக தீ வேகமாக பரவியிருக்கிறது. சம்பவத்தின்போது, வார்டில் 6 நர்சுகள், 2 ஊழியர்கள், 2 பெண் டாக்டர்கள் பணியில் இருந்தனர். நர்ஸ் ஒருவர் தீயை அணைக்க முயன்றபோது காயமடைந்தார். தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்க மருத்துவ ஊழியர்கள் 3 பேர் தீயை அமைக்க முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பத்தைவதேசிய மனித உரிமைகள் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவம் மனித உரிமை மீறலை பிரதிபலிப்பதாக கூறியது. இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு மற்றும் மாநில டிஜிபி ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க கேட்டுள்ளது. எப்ஐஆர் விபரம், பொறுப்பு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.