உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாம்பரம் ஸ்டேஷனில் பயணிகள் தள்ளுமுள்ளு tambaram railway station tambaram chennai

தாம்பரம் ஸ்டேஷனில் பயணிகள் தள்ளுமுள்ளு tambaram railway station tambaram chennai

தாம்பரம் ஸ்டேஷனில் பயணிகள் தள்ளுமுள்ளு tambaram railway station tambaram chennai beach trains heavy crowd in tambaram தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஞாயிற்றுக்கிழமையன்று பல்லாவரத்தில் இருந்து தான் சென்னை பீச் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வழக்கம்போலவே தாம்பரத்தில் இருந்தே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒன்று முதல் 6 வரையிலான நடைமேடைகளில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக, 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. 30 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் அந்த 2 நடைமேடைகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் குறைவாக இருக்கும். இன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் முண்டியடித்து மக்கள் ஏறினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வயதான மற்றும் குழந்தைகளுடன் வந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த ரயில் நிலையத்தில் எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. ஒன்றிரண்டு ரயில்வே போலீசாரே இருந்தனர். அவர்களும் விசில் ஊதுவதோடு தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். தாம்பரத்தில் இருந்து குறைவான ரயில்களே இயக்கப்பட்டதால் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தாம்பரத்திலிருந்து பல்லாவரத்துக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. முகூர்த்த நாள் என்பதால் கார்களின் எண்ணிக்கையும் அதிகமாக ஓடின. இதனால் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை