உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்த நைஜீரியா | Nigeria | PM Modi | Modi's Nigeria Visit

மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்த நைஜீரியா | Nigeria | PM Modi | Modi's Nigeria Visit

மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவித்த நைஜீரியா | Nigeria | PM Modi | Modis Nigeria Visit நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நைஜீரியா சென்றுள்ளார். 17 ஆண்டுகளுக்கு பின் நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். நைஜீரிய வாழ் இந்தியர்கள் மற்றும் நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். தலைநகர் அபுஜாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து நைஜீரியாவில் கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் ( the Grand Commander of The Order of the Niger) எனும் உயரிய விருது மோடிக்கு வழங்கப்பட்டது. உலகளாவிய தலைவர் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் 1969ல் பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. எலிசபெத் ராணிக்கு பிறகு இந்த விருதை பெற்ற 2வது பிரபலம் என்ற பெருமைக்கு மோடி சொந்தக்காரராகி உள்ளார். விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என மோடி கூறியுள்ளார். பிரதமர் இதுவரை வெளிநாடுகளில் பெற்ற உயரிய விருதுகளில் இது 17வது விருதாக அமைந்துள்ளது. நைஜீரியா பயணத்தை முடித்து பிரதமர் பிரேசில் கிளம்பி உள்ளார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதன்பிறகு பிரேசிலில் இருந்து கயானாவிற்கு செல்லும் மோடி கயானா அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். அந்நாட்டின் பார்லியிலும் உரையாற்ற உள்ளார். 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கயானா செல்லும் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற உள்ளார். 2 நாள் கயானா பயணத்துக்கு பின் நம் நாட்டுக்கு திரும்புகிறார்.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !