தேடுதல் வேட்டையை துவக்கியது மத்திய அரசு! | Operation Sagar Manthan | Drug Cartel | Haji Salim
தேடுதல் வேட்டையை துவக்கியது மத்திய அரசு! | Operation Sagar Manthan | Drug Cartel | Haji Salim மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் கும்பல்கள் கார்டெல் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் போதை பொருள் வினியோகத்தில் பல கார்டெல்கள் உள்ளது. நம் நாட்டில் சலீம் கார்டெல் தான் மிகப் பெரிய போதை மாஃபியா. இந்தியா, மொரீஷியஸ், இலங்கை, மாலத்தீவில் இவர்கள் கை மேலோங்கி உள்ளது. அமெரிக்கா, மலேஷியா, ஈரான், இலங்கை, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் விசாரணை அமைப்புகளும் சலீம் கும்பலை தேடி வருகின்றன. கேரள கடல் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடந்த 2015ல் பிடிபட்டது. அப்போது தான் சலீம் என்ற பெயர் முதன்முதலில் வெளி உலகுக்கு தெரியவந்தது. சலீமின் கும்பல் ஈரானில் இருந்து போதை பொருட்களை கடத்தி ஆப்கானிஸ்தான், மலேஷியா வழியாக இலங்கைக்கு கொண்டு வருகிறது. அங்கிருந்து சிறிய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு இந்திய கடல் பகுதிக்கு வந்து இறங்குகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய மாஃபியா வளர்ந்து நிற்கும் சலீம் கார்டெலை பிடிக்க ஆப்பரேஷன் சாகர் மந்தன் என்ற தனிப்படையை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இவர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், சலீம் கும்பலுக்கு சொந்தமான 4,000 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த சிலர் கைதாகி உள்ளனர். இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங் கூறியதாவது: ஹெராயின், மெத்தபெட்டமைன் உட்பட பல்வேறு போதை பொருட்களை சலீம் கும்பல் உலகம் முழுதும் வினியோகிக்கிறது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் இவர்களுக்கு மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றார். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான சலீம் மற்றும் கூட்டாளிகள், இந்திய பெருங்கடல் பகுதியில் போதை பொருள் புழக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத குழுக்களுக்கு அளித்து வருகின்றனர். பாக்கிஸ்தான் உளவு அமைப்பான, ஐஎஸ்ஐ இவர்களுக்கு நேரடியாக உதவி வருகின்றனர். பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் பிராந்தியத்தை சேர்ந்த இளைஞர்களை போதை கடத்தலுக்கு சலீம் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உடன் சலீமுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.