உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச ஐயப்ப சங்கமம் நடத்தவும் முடிவு! | Sabarimala ropeway project | Sabarimala Ayyappa Temple

சர்வதேச ஐயப்ப சங்கமம் நடத்தவும் முடிவு! | Sabarimala ropeway project | Sabarimala Ayyappa Temple

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவைப்படும் பூஜை பொருட்களை தலைச்சுமையாகவும், டோலியிலும், கழுதைகள் வாயிலாகவும் கொண்டு செல்லும் பழக்கம் உள்ளது. இதை மாற்ற பம்பை டு சன்னிதானம் இடையே 250 கோடி செலவில் ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டது. வயநாடு இடைத்தேர்தல் காரணமாக பணிகள் தாமதமானது. இப்போது தேர்தல் முடிந்துள்ளதால் ரோப்கார் அமைக்கும் பணிகளை துவக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ரோப் கார் அமைக்க உத்தேசித்திருந்த ஏழு தாங்கு பில்லர்களுக்கு பதில் ஐந்து பில்லர்கள் மட்டும் அமைக்கவும், ரோப் கார் பாதையில் வெட்ட முடிவு செய்திருந்த 300 மரங்களுக்கு பதில் 80 மரங்களை மட்டும் வெட்டவும் திருத்திய மதிப்பீட்டின் படி திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 2.7 கிமீ துாரத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த ரோப் கார் சேவையால் பம்பையில் இருந்து சன்னிதானத்தை 10 நிமிடங்களில் அடைந்து விடலாம். சன்னிதானத்திற்கு தேவையான அத்தியாவசிய பூஜை பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் பக்தர்களை சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு அழைத்து வரவும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு உற்சவ காலத்திலேயே இந்த பணிகள் துவங்கும் என்றனர். இது தவிர மற்றொரு முக்கிய நிகழ்வாக சபரிமலையின் மகத்துவத்தை உலகம் முழுதும் எடுத்து செல்லும் வகையில் சர்வதேச ஐயப்ப சங்கமம் நடத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்த பக்தர் குழுவினர் இப்படி ஒரு நிகழ்வை நடத்தினால் அதற்கு போதுமான அனைத்து ஒத்துழைப்பை தருவதாக தேவசம்போர்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். 25 நாடுகளில் உள்ள ஐயப்ப பக்தர்களின் பட்டியலையும் அவர்கள் தேவசம்போர்டு அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இந்த சங்கமம் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுதும் சபரிமலை ஐயப்பனின் மகத்துவத்தை எடுத்து செல்ல முடியும் என தேவசம்போர்டு கருதுகிறது. நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் முடிந்ததும் இந்த சங்கமம் நடைபெறும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை