/ தினமலர் டிவி
/ பொது
/ தொடர் மழையால் நள்ளிரவில் வீடு இடிந்ததால் கிராம மக்கள் பீதி | Heavy rain | House damage | Nagai
தொடர் மழையால் நள்ளிரவில் வீடு இடிந்ததால் கிராம மக்கள் பீதி | Heavy rain | House damage | Nagai
நாகை மாவட்டத்தில் கடந்த நான்கைந்து நாட்களாக விட்டு விட்டு தொடர் கன மழை பெய்கிறது. குறிப்பாக வேதாரண்யத்தில் மட்டும் 19 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில் திருமருகல் ஒன்றியம் அம்பல் கிராமத்தில் தொடர் மழை காரணமாக வீடு ஒன்று நள்ளிரவு இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 60 வயது அஞ்சம்மாள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவ 18, 2024