உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய உச்ச தலைவர் யார்? ஈரானில் பதற்ற நிலை Iran Supreme Leader Ali Khamenei

புதிய உச்ச தலைவர் யார்? ஈரானில் பதற்ற நிலை Iran Supreme Leader Ali Khamenei

புதிய உச்ச தலைவர் யார்? ஈரானில் பதற்ற நிலை Iran Supreme Leader Ali Khamenei health Coma condition second Son Mojtaba Khamenei who is Successor Khamenei meets Iranian Envoy ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் கடந்த சில வாரங்களாகவே போர் மூளும் சூழல் உள்ளது. ெஹஸ்புலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 1ம்தேதி 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி, ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக அக்டோபர் 26-ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் முக்கிய ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீது குண்டுகளை வீசின. அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த விவகாரத்தில் அவர் முடிவை எதிர்பார்த்து சம்பந்தப்பட்ட நாடுகள் காத்திருக்கின்றன. ஈரான் நாட்டின் அதிபராக மசூத் பெசஸ்கியான் உள்ளார். ஆனாலும் அந்த நாட்டு மதத் தலைவர் அயத்துல்லா அலி கமெனியே உச்ச தலைவராக கருதப்படுகிறார். முக்கிய முடிவுகளை அவரே எடுக்கிறார். முக்கியமான தருணங்களில் மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்துவார். ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் தீர்த்து கட்டிய சமயத்தில் டெஹ்ரானில் மக்களிடையே அலி கமெனி ஆவேச உரையாற்றினார். லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுகிறார்கள். ஹமாஸ் மற்றும் ெஹஸ்புலாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெறாது. ஈரான், பாலஸ்தீனம், லெபனான், எகிப்து, ஈராக், ஏமன், சிரியாவுக்கு இஸ்ரேல்தான் ஒற்றை எதிரி என அலி கமெனி ஆவேசமாக உரை நிகழ்த்தினார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் எப்போது போர் மூளுமோ என்ற பரபரப்பான கட்டத்தில் அலி கமெனி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அலி கமெனி கோமா நிலையில் இருப்பதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஈரான் உச்ச தலைவர் அலி கமெனிக்கு 85 வயதாகிறது. கடந்த சில ஆண்டாகவே அலி கமெனியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த உச்ச தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. நாட்டின் உச்ச தலைவரை தேர்வு செய்ய ஈரான் நிபுணர் குழு என்ற ஒரு அமைப்பு உள்ளது. அந்தக்குழு உறுப்பினர்கள் கூடி, அலி கமெனியின் 2வது மகன் மொஜ்தாபா கமெனியை ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக தேர்வு செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம்தேதி நடந்த நிபுணர் சபையின் ரகசிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஈரான் இண்டர்நேஷனல் எனும் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. கமெனியின் உத்தரவின்பேரிலேயே அக்குழு கூடி புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தாபா கமெனிக்கு பெரியளவில் அனுபவம் இல்லை. ஈரான் அரசாங்கத்திலும் எந்த முறையான பதவிகளையும் அவர் வகிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அவர் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மரணத்துக்கு பிறகு அடுத்த தலைவர் யார் என்பதில் பிரச்னைவரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவை அலி கமெனி எடுத்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன் உச்ச தலைவர் பதவியில் இருந்து அலி கமெனி விலகும் அறிவிப்பு வெளிவரலாம்; அதைத் தொடர்ந்து உடனடியாக மொஜ்தாபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவி ஏற்கலாம் என இஸ்ரேலிய செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டு ஈரானில் பரபரப்பை கூட்டியுள்ளது. ஈரானின் நிபுணர்கள் சபையில் 60 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த உச்ச தலைவர் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் நிபுணர் சபை உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலி கமெனி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தகவலையும் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என நிபுணர் சபை உறுப்பினர்கள் மிரட்டப்பட்டதாகவும் இஸ்ரேல் மீடியாக்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 26ம் தேதி நடந்த கூட்டத்தில் ஏகமனதாக, மொஜ்தாபா கமெனியை ஏகமனதாக தேர்வு செய்யும்படியும் நிபுணர் சபை குழு உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய உச்ச தலைவர் தேர்வான விவரத்தை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அதுபற்றியும், அலி கமெனி உடல்நிலை பற்றியும் வெளி வரும் செய்திகள் ஈரான் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அலி கமெனி உடல்நிலை பற்றி வெளியான தகவல்கள் ஈரான் மக்களை கவலையடையச் செய்துள்ள நிலையில், உச்ச தலைவர் அலி கமெனியும் லெபனான் நாட்டுக்கான ஈரான் தூதர் மொஜ்தாபா அமானியும் உரையாடும் புகைப்படத்தை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது. அலி கமெனி நலமுடன் உள்ளார்; வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளது. ஆனால், இது பழைய படம்; மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கவே இந்த பழைய படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ