உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக நிலை என்ன? ஆனந்த் முக்கிய அறிவிப்பு N.Anand| TVK | Vijay| No alliance with ADMK

தவெக நிலை என்ன? ஆனந்த் முக்கிய அறிவிப்பு N.Anand| TVK | Vijay| No alliance with ADMK

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர் விஜய் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்தார். தலைவர் வழிகாட்டுதல்படி தமிழக வெற்றிக் கழகம், 2026ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைக்க அனைத்து வியூகங்களையும் வகுத்து வருகிறது. 2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மை சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரம் இல்லாதது. தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலனுக்கானது. விக்கிரவாண்டி மாநாட்டில் தலைவர் விஜய் தெரிவித்தபடி பெரும்பான்மை பலத்தோடு தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள் என ஆனந்த் கூறியுள்ளார்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை