ராணுவ வீரருக்கு மீண்டும் உயிர் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள் | AIIMS Bhubaneswar| eCPR Saved Soldier
ஒடிசா நாயகர் மாவட்டத்தில் உள்ள ஒடபாலா கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுபகந்த். வயது 24. மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டதால் அக்டோபர் 1ல் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அங்கு சிகிச்சையின் போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துடிப்பு செயலிழந்த நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் மீண்டும் உயிர் கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியதாவது: 40 நிமிடம் அவருக்கு CPR சிபிஆர் சிகிச்சை அளித்தும் இதய துடிப்பு வரவில்லை. ஒரு கட்டத்தில் எங்கள் முன் இரண்டு வழிகள் தான் இருந்தன. ஒன்று அவர் இறந்துவிட்டார் என அறிவிப்பது; இன்னொன்று, eCPR எனப்படும் முறையில் முயற்சித்து பார்ப்பது. எக்ஸ்ட்ரா கார்போரல் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் எனப்படும் eCPR சிகிச்சை அளித்தோம்.