உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜவின் 50 கேள்விகள்! LIC website | Hindi Issue | Stalin | DMK | 50 Question

முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜவின் 50 கேள்விகள்! LIC website | Hindi Issue | Stalin | DMK | 50 Question

முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜவின் 50 கேள்விகள்! LIC website | Hindi Issue | Stalin | DMK | 50 Question எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் சில தினங்களுக்கு முன் இந்திக்கு மாறியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து பலவந்தமாக மொழி திணிப்பு செய்யப்படுகிறது. மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் மொழி மாற்றம் நடந்ததாக எல்ஐசி தெரிவித்தது. அந்த பிரச்னையை தற்போது சரிசெய்து விட்டதாகவும் கூறியது. தற்போது இந்த பிரச்னையை தமிழக பாஜ கையில் எடுத்துள்ளது. தொழில்நுட்ப பிரச்னையை எல்ஐசி சரிசெய்து விட்டது. தங்களிடம் உள்ள பிரச்னையை சரிசெய்வது எப்போது என பாஜ கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக பாஜ, ஸ்டாலினிடம் 50 கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்து விட்டீர்களா, போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தங்களது குடும்பத்துக்கு உள்ள தொடர்பு என்ன, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து விட்டீர்களா, டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகரிப்பது தெரியுமா என வரிசையாக 50 கேள்விகளை அடுக்கி உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் என பாஜ எதிர்பார்த்து காத்திருக்கிறது. ----

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை