6ம் வகுப்பு மாணவனின் புகாரை கனிவுடன் கேட்ட இன்ஸ்பெக்டர்! School Student | Police Complaint
6ம் வகுப்பு மாணவனின் புகாரை கனிவுடன் கேட்ட இன்ஸ்பெக்டர்! School Student | Police Complaint | Gudiyattham வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே முங்கப்பட்டை சேர்ந்தவன் பூபேஷ். ஆறாம் வகுப்பு படிக்கிறான். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினான். 7 ரூபாய் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் நோட்டை கண்டக்டரிடம் கொடுத்தான். ஆத்திரமடைந்த அவர் சரியான சில்லறை கொடுக்கும்படி மாணவனை திட்டியுள்ளார். இதனால் வெறுப்படைந்த பூபேஷ் வீட்டுக்கு சென்று கண்டக்டர் திட்டியதை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளான். தொடர்ந்து குடியாத்தம் காவல்நிலையத்துக்கு பெற்றோருடன் பூபேஷ் சென்று கண்டக்டர் மீது புகார் அளித்தான். இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மாணவன் புகாரை கனிவுடன் கேட்டு விவரங்களை குறித்து கொண்டார். கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மாணவனுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கண்டக்டர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவன் போலீசில் புகார் அளிக்க வந்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.