உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்தவர்கள் சிக்கியது எப்படி 3 NRI Students| seats| mbbs| cancelled

போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்தவர்கள் சிக்கியது எப்படி 3 NRI Students| seats| mbbs| cancelled

தமிழகத்தில் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர NRI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தாண்டு மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட்டில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட என்.ஆர்.ஐ. மாணவர்களில் 6 பேர் அளித்த சான்றிதழ்கள் போலியானவை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொடுத்த தூதரக சான்றிதழ்களை அந்தந்த தூதரகங்களுக்கு அனுப்பி சரிபார்த்தபோது 6 பேர் கோல்மால் செய்தது தெரிந்தது. 6 பேரில் 3 பேர் மட்டும் அட்மிஷன் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 2 பேர் சென்னை மாதா கல்லூரியிலும், மற்றொருவர் கோவை கற்பகம் கல்லூரியிலும் படிக்கின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து சீட் பெற்ற 3 மாணவர்களின் அட்மிஷனை தமிழக மருத்துவ தேர்வுக்குழு ரத்து செய்திருக்கிறது. போலி சான்றிதழ்கள் கொடுத்த மாணவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும் எனத்தெரிகிறது. ரத்து செய்யப்பட்ட 3 என்.ஆர்.ஐ. மாணவர்களின் இடங்களுக்கு வரும் 25ம் கவுன்சிலில் நடைபெறும் என மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !