மகாராஷ்ட்ரா தேர்தலில் வரலாறு படைத்தது பாஜ Maharashtra election results | BJP| Shiv Sena| NCP
மகாராஷ்ட்ரா தேர்தலில் வரலாறு படைத்தது பாஜ Maharashtra election results | BJP| Shiv Sena| NCP மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. மாநில முதல்வரும் சிவசேனா ஷிண்டே பிரிவு தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, தொண்டர்களை சந்தித்தார். கட்சியினரின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். கூட்டணி வெற்றி குறித்து ஷிண்டே கூறியதாவது: எங்கள் கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். எங்கள் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. அன்பான சகோதரிகள், விசாயிகள், சகோதரர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார். பாஜ 125 இடங்களிலும், சிவசேனா ஷிண்டே பிரிவு 55 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் அஜித் பிரிவு 39 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜவுக்குத் தான் முதல்வர் பதவி என மாநில பாஜ தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என, ஷிண்டே ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தங்கள் தலைவர் தான் கிங் மேக்கர் என அஜித் பவார் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். மகாராஷ்டிரா அரசியலில் இதுவரை இல்லாத வகையில், பாஜ மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அடுத்த முதல்வரை தேர்வு செய்வது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.