விஜய் விருந்துக்கு குடும்பத்துடன் வந்த விவசாயிகள் | TVK VIJAY | PANAIYUR | VIKIRAVANDI MEETING
விஜய் விருந்துக்கு குடும்பத்துடன் வந்த விவசாயிகள் | TVK VIJAY | PANAIYUR | VIKIRAVANDI MEETING | நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ம்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடந்தது. மாநாட்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், முன்னாள் முதல்வர் காமராஜர், அம்பேத்கர், ஈவெரா, வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அடையாளப்படுத்தினார். தவெக மாநாட்டை முதலில் திருச்சியில் நடத்தத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இடம் தேர்வில் சிக்கலும் வந்தது. இதையடுத்து மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்பட்டது. 230 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தை கொடுத்தனர். மாநாடு முடிந்ததும் நிலத்தை விவசாயத்துக்கு ஏற்றாற்போல் பண்படுத்தி மீண்டும் ஒப்படைப்பது என முன்கூட்டியே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, நிலங்கள் பழையபடி விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உயர் ரக பசு மற்றும் கன்றுகள் தவெக சார்பில் வழங்கப்பட்டது. மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய மரியாதை செய்ய முடிவெடுத்த விஜய் பனையூரில் தடபுடலாக விருந்து அளிக்க தீர்மானித்தார். அதன்படி நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 300 விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் பனையூரில் உள்ள தவெக தவெக தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு சைவ விருந்து பரிமாறப்பட்டது. கட்சி தலைவர் விஜய் விவசாயிகளுடன் உரையாடினார். மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவியதற்காக நன்றி சொன்னார்.