சிஏ தேர்வு தேதி விவகாரம்; நிர்மலா சீதாராமன் பதில் | Nirmala Sitharaman | CA Exam Date Issue
சிஏ தேர்வு தேதி விவகாரம்; நிர்மலா சீதாராமன் பதில் | Nirmala Sitharaman | CA Exam Date Issue சிஏ (CA) தேர்வு ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே தேதிகளில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு திமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பொங்கல் நாளன்று சிஏ தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும் என மதுரை சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் கூறினார். தேர்வு தேதிகளை மாற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் கூறி இருந்தார். வெங்கடேசனின் பதிவுக்கு தமிழக பாஜ செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விளக்கம் கொடுத்தார். பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி, வடக்கில் லோஹ்ரி, உபி.யில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா , பஞ்சாபில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என கொண்டாடப்படுகிறது. பொங்கல் இந்தியா முழுதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை. இது எப்படி தமிழருக்கு மட்டும் எதிரானதாகும்? சி ஏ தேர்வுக்கான தேதிகள் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. நிதி அமைச்சகத்தால் அல்ல. தொழில்முறை பாட தேர்வுகளுக்கு ஏன் இத்தகைய விடுமுறைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது தொழில் வல்லுநர்களுக்கு மட்டுமே தெரியும் என கூறி இருந்தார். இதை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா. எதில் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என பதிலடி கொடுத்துள்ளார்.