உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வகுப்பறையில் மயங்கிய சிறுவன் மரணம்: பெற்றோர் கதறல்

வகுப்பறையில் மயங்கிய சிறுவன் மரணம்: பெற்றோர் கதறல்

வகுப்பறையில் மயங்கிய சிறுவன் மரணம்: பெற்றோர் கதறல் திருச்சி, லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலன் வயது 13. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். சிறு வயதிலேயே இதய நோயால் பாதித்திருந்த வெற்றிவேலன், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இன்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற வெற்றிவேலன், வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளான். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், வெற்றிவேலனை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி