தினம் ஒரு மோதலால் அதிமுக தலைவர்கள் அப்செட் | Tirupparankunram | RajanChellappa | ADMKFight
தினம் ஒரு மோதலால் அதிமுக தலைவர்கள் அப்செட் | Tirupparankunram | RajanChellappa | ADMKFight மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே அதிமுக கள ஆய்வு கூட்டம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்தபோது மதுரை மாநகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி தலைவர் ரமேஷை சிலர் மேடையில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அதிமுகவினர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ராஜன் செல்லப்பா எடுத்துக்கூறியும் மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ராஜன் செல்லப்பா ஆகியோர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். திங்களன்று காலையில் மதுரையில் நடந்த கூட்டத்திலும், அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். கடந்த 22ம் தேதி திருநெல்வேலியில் நடந்த கள ஆய்வு கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன் இரு கோஷ்டியினர் தாக்கிக்கொண்டனர். கும்பகோணத்திலும் அதே மாதிரியான சம்பவம் அரங்கேறியது. அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் மோதலால், கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.