பார்க்கிங் பிரச்னையில் தகராறு வக்கீல் கைது! | Chennai police | Viral Video
பார்க்கிங் பிரச்னையில் தகராறு வக்கீல் கைது! | Chennai police | Viral Video சென்னை பெரம்பூர் ஜமாலையா பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இடிக்கப்பட்ட கழிவுகளை வீட்டின் வெளியே கொட்டி வந்துள்ளார். அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார் காரை நிறுத்துவது வழக்கம். இது குறித்து ஏற்கனவே இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் காரை பார்க் செய்த கிருஷ்ணகுமார் பாஸ்கர் குடும்பத்தினரோடு தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் காரில் இருந்து பெரிய கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். சம்பவம் பற்றி ஓட்டேரி போலீசில் பாஸ்கர் புகார் அளித்தார். வீடியோ ஆதாரத்தை வைத்து வக்கீல் கிருஷ்ண குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர். கிருஷ்ணகுமார் கத்தியுடன் பாஸ்கரை மிரட்டும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.