உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் | Heavy rain | Nagai

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் | Heavy rain | Nagai

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் | Heavy rain | Nagai | Mayiladuthurai | Tiruvarur | Red alert தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அது புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது அதன்படி டெல்டா மாவட்டங்களில் காலை முதலே கனமழை கொட்டுகிறது. மயிலாடுதுறையில் காலை 8:30 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 54 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் கடலோர பகுதிகளான தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்வளத்துறை அறிவுறுத்தலின் பேரில் மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 500 விசைப்படகுகள், 5 ஆயிரம் பைபர் படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலும் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் பல இடங்களில் கனமழை பெய்கிறது குறிப்பாக திருவாரூர் நன்னிலம் சேந்தமங்கலம் வடபாதிமங்கலம் கமலாபுரம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி காரிக்கோட்டை விளமல் கோட்டூர் விக்கிரபாண்டியம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டுகிறது. இடைவிடாத கனமழையால் வியாபாரிகள், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. புதுச்சேரியில் காலை சாரலாக தொடங்கிய மழை தொடர்ந்து கனமழையாக வெளுத்து வாங்கியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் பள்ளி சென்ற மாணவர்கள், அலுவலகம் சென்றவர்கள் மழையில் நனைந்து அவதி அடைந்தனர்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ