உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்; மீனவ மக்கள் அச்சம் | Cyclone Fengal Alert | Heavy rain | Marina Be

10 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்; மீனவ மக்கள் அச்சம் | Cyclone Fengal Alert | Heavy rain | Marina Be

10 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்; மீனவ மக்கள் அச்சம் | Cyclone Fengal Alert | Heavy rain | Marina Beach வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‍பெங்கல் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் சென்னை, திருவள்ளூர், கடலூர், புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னையில், மெரினா, பட்டினம்பாக்கம் பகுதியில் பலத்த காற்றும் வீசி வருகிறது. புதுச்சேரி, திருவள்ளுர் கடற்கரையில் 10 அடிக்கும் மேல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வருகிறது. கடற்கரை ஓரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை