உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிரட்டும் கனமழை: வேதனையில் விவசாயிகள் Fengal Cyclone| Tanjavur Tiruvarur

மிரட்டும் கனமழை: வேதனையில் விவசாயிகள் Fengal Cyclone| Tanjavur Tiruvarur

மிரட்டும் கனமழை: வேதனையில் விவசாயிகள் Fengal Cyclone| Tanjavur Tiruvarur rain update| TN Rain ஃபெங்கல் புயல் காரணமாக, தஞ்சையில் இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாமல் கொட்டும் கனமழையால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்காக, அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் தஞ்சை வந்துள்ளனர். 60 பேர் கொண்ட இரண்டு மீட்பு குழுவினர் ஸ்ட்ரெச்சர், படகு, கயிறு, மரம் அறுக்கும் எந்திரம், ஆக்ஸிஜன் சிலிண்டர், ஜெனரெட்டர், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை, புத்தூர், சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா - தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலும் நாசமாயின. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், பயிர்கள் அழுகி வீணாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகர் பகுதியிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் பெய்யும் கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வயல் வெளிகள் குளம்போல காட்சி அளிக்கின்றன. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறினர். திருவாரூர் நன்னிலத்தில் சாலை ஓரம் இருந்த 50 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. நேற்று திருவாரூரில் 12 செமீ, திருத்துறைப்பூண்டியில் 10 செமீ மழை பெய்தது. இன்றும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை