உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 210+ மிமீ அடித்து ஊற்றும்... பெஞ்சல் ஆட்டம் ஆரம்பம் cyclone fengal | TN Cyclone | IMD fenjal update

210+ மிமீ அடித்து ஊற்றும்... பெஞ்சல் ஆட்டம் ஆரம்பம் cyclone fengal | TN Cyclone | IMD fenjal update

கடந்த சில நாட்களாக தென் மேற்கு வங்க கடலில் போக்கு காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒரு வழியாக இன்று மதியம் 2:30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு பெஞ்சல் (Fenjal) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென் சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவும் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். நாளை மதியம் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயலாகவே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, காரைக்காலுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ