வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் fengal cyclone| chennai rain|
வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் fengal cyclone| chennai rain| வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் சென்னைக்கு 140 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. பிற்கலில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை பெய்கிறது. ஓம்ஆர், இசிஆர் சாலைகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்வதால் பஸ்கள் இயக்க தற்காலி தடை போடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், வேளச்சேரி மக்கள் தங்கள் கார்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க மேம்பாலங்கள் மீது நிறுத்தி வைத்துள்ளனர்.