உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு மருத்துவமனையில் நீர்புகுந்ததால் நோயாளிகள் அவதி Government Hospital Chromepet chennai rain Fen

அரசு மருத்துவமனையில் நீர்புகுந்ததால் நோயாளிகள் அவதி Government Hospital Chromepet chennai rain Fen

அரசு மருத்துவமனையில் நீர்புகுந்ததால் நோயாளிகள் அவதி Government Hospital Chromepet chennai rain Fengal cyclone பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து கன மழை பெய்கிறது. குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் தரைத்தளத்திற்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் தரைத் தளத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் முதல் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தரைத்தளத்தில் உள்ள மருந்து வழங்கும் பிரிவு மூடப்பட்டு, அருகில் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் தரைத்தளத்தில் இயங்கி வரும் இசிஜி பிரிவு அங்கேயே செயல்பட்டு வருகிறது இதனால் நோயாளிகள் மழை நீரில் நடந்து சென்று இசிஜி எடுக்க வேண்டியுள்ளது. தொடர்மழையால் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மருத்துவமனைக்குள் மழைநீர் புகாமல் இருக்கும் வகையில், குரோம்பேட்டை போலீசார், மணல் முட்டைகளை மருத்துவமனை வாசலில் அடுக்கி வருகின்றனர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள நெஞ்சக மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மழைநீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகளின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை