உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயல் கரை கடந்த போது வீதியில் இறங்கி போராடிய மக்கள் | cyclone fengal | fenjal update| chennai rain

புயல் கரை கடந்த போது வீதியில் இறங்கி போராடிய மக்கள் | cyclone fengal | fenjal update| chennai rain

புயல் கரை கடந்த போது வீதியில் இறங்கி போராடிய மக்கள் | cyclone fengal | fenjal update| chennai rain இரவு 9 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. கொசுக்கடியால் குழந்தைகள், முதியோர் கடும் அவதி அடைந்தனர். மின் வாரிய அலுவலகம் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொண்ட போதும், யாரும் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிட்டனர். அங்கு முறையான பதில் அளிக்காததால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாநகரப் பேருந்தை மறித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருவொற்றியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின் இணைப்பு தர உத்தரவிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை