சாலையில் தேங்கிய நீரில் சிக்கி கொண்ட லாரி! | Villupuram Rain Visuals | Heavy Rain | Cyclone Effect
சாலையில் தேங்கிய நீரில் சிக்கி கொண்ட லாரி! | Villupuram Rain Visuals | Heavy Rain | Cyclone Effect புதுச்சேரி அருகே கரையை கடந்த பெஞ்சல் புயல் காரணமாக இரவு முதல் விழுப்புரம் , புதுச்சேரியில் அதிகனமழை கொட்டித்தீர்த்துள்ளது. விழுப்புரத்தின் மையிலம் பகுதியில் 49 செ.மீ, புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக விழுப்புரத்தின் அனைத்து இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டை சுற்றி மூன்று அடிக்கு மேல் நீர் தேங்கி தாழ்வான பகுதியை நோக்கி ஆறு போல் ஓடுகிறது. பஸ்கள் உள்ளே செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து இயக்கப்படுகிறது. விக்கிரவாண்டி அருகே உள்ள விசாலை பகுதியில் குளம் போல தேங்கி உள்ள வெள்ளத்தில் லாரி ஒன்று சிக்கிக்கொண்டது. விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒருவழிப்பாதையாக திருப்பி விடப்பட்டு உள்ளன.