உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தி.மலை நிலச்சரிவு ஸ்பாட்டில் இப்போது என்ன நிலை? வீடியோ | Tiruvannamalai Landslide | fengal cyclone

தி.மலை நிலச்சரிவு ஸ்பாட்டில் இப்போது என்ன நிலை? வீடியோ | Tiruvannamalai Landslide | fengal cyclone

தி.மலை நிலச்சரிவு ஸ்பாட்டில் இப்போது என்ன நிலை? வீடியோ | Tiruvannamalai Landslide | fengal cyclone பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள தீப மலை அடிவாரத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 வீடுகளை நிலச்சரிவு குவியல் மூடியது. 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உள்ளே சிக்கி இருப்பத தெரியவந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், இருட்டியதாலும் உடனடியாக மீட்பு பணியை துவங்க முடியவில்லை. 16 மணி நேரம் கழித்து இன்று காலையில் முழு வேகத்தில் மீட்பு பணி துவங்கி நடக்கிறது. 2 மோப்ப நாய்களுடன் வந்த 35 தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வுக்கு பிறகு மீட்பு பணியை துவங்கினர். அவர்களுடன் 40 போலீஸ் கமாண்டோக்கள், 40 ஆயுதப்படை காவலர்கள், 20 மாநில மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் என 170 பேர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இருப்பது ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் 2 பேர் மற்றும் உறவினர்களின் 3 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களின் கதி என்னவென்பது இப்போது வரை தெரியவில்லை.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை