உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் நடந்த துயர சம்பவம் | Football match | Penalty sparks riot | Guinea

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் நடந்த துயர சம்பவம் | Football match | Penalty sparks riot | Guinea

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் ராணுவ தலைவர் மமாடி தம்பவுயா தலைமையில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அவரை கவுரவிக்கும் வகையில் அந்நாட்டின் தலைநகர் கோனக்ரியில் உள்ள ஸெரேகோர் நகரில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். போட்டியின்போது ஒரு அணிக்கு நடுவர் வழங்கிய பெனால்டிக்கு அந்த அணியின் ரசிகர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் மைதானமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மோதலை தடுக்க கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அச்சமடைந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் பரிதாபமாக பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ