உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊருக்குள் புகுந்த வெள்ளம்; தீவாக மாறிய டிஎன் பாளையம் | Flood | Heavy Rain | Veedur dam | TN Palayam

ஊருக்குள் புகுந்த வெள்ளம்; தீவாக மாறிய டிஎன் பாளையம் | Flood | Heavy Rain | Veedur dam | TN Palayam

பெஞ்சல் புயல் எதிரொலியால் கொட்டிய கனமழையில் வீடுர் அணை நிரம்பி திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிளை ஆறான மலட்டாரிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமமான டி.என் பாளையத்தில் வெள்ள நீர் புகுந்தது. 800க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் நீரில் மூழ்கி உள்ளன. மலட்டாறில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை வைத்தும் பயனில்லை என அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்பு குழுவினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை