உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிணைக்கைதிகளை விட ஹமாஸ்க்கு டிரம்ப் கெடு donald trump | warns| Hamas| if Hostages not freed|

பிணைக்கைதிகளை விட ஹமாஸ்க்கு டிரம்ப் கெடு donald trump | warns| Hamas| if Hostages not freed|

பிணைக்கைதிகளை விட ஹமாஸ்க்கு டிரம்ப் கெடு donald trump | warns| Hamas| if Hostages not freed| கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றது. இதனால் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடக்கிறது. இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த டூரிஸ்டுகள் 101 பேர், ஹமாஸ் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் ஆயுத குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 20ம் தேதி நான் அதிபராக பதவி ஏற்பதற்கு முன், பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லையெனில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் பேரழிவை சந்திக்கும். மனித குலத்துக்கு எதிராக அட்டூழியங்கள் செய்தவர்களுக்கு நரக வேதனை ஏற்படும் என டிரம்ப் கூறி உள்ளார். டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை ஹமாஸ்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை