சல்லடை போடுகிறது தனிப்படை! லிஸ்டில் 850 பேர் | Palladam Case | Tirupur Crime News | Tirupur Police
சல்லடை போடுகிறது தனிப்படை! லிஸ்டில் 850 பேர் | Palladam Case | Tirupur Crime News | Tirupur Police திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, இவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். நவம்பர் 28ல் நடந்த சம்பவத்தின் போது 15 ஏக்கர் விவசாய தோட்டத்துடன் உள்ள இவர்களது வீட்டில் 8 பவுன் நகையும் திருடு போயிருந்தது. மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் இது வரை பெரிய அளவில் துப்பு கிடைக்கவில்லை. 10 தனிப்படைகள் விசாரித்தும் பெரிய முன்னேற்றம் இல்லாததால் தனி படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் குடும்பத்துக்குள் வேறு பிரச்சனை, முன் விரோதம் இல்லை. காங்கேயம், பல்லடம், அவிநாசி பாளையம், தாராபுரம், திருப்பூரில் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பழைய குற்றவாளிகளின் லிஸ்டையும் போலீசார் சல்லடை போட்டு வருகின்றனர். வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து போலீசார் கூறியதாவது, கொள்ளைக்காக நடந்த கொலையா, அல்லது முன்விரோதத்திற்காக நடந்ததா என விசாரணை நீடிக்கிறது. இவர்களது தோட்டத்தில் வேலை செய்த நபர் சம்பவத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதே போல் முன்பு நடந்த கொலை சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்தோம். ஒன்றரை வருடத்துக்கு முன் சென்னிமலை, காங்கேயம் பகுதிகளில் வயதானவர்களை குறி வைத்து நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டதில் ஒரே மாதிரியான கொலை என்பது தெரிகிறது. இதில் ஒரு வழக்கில் ஒரு கும்பல் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். திருப்பூரில் 2011 முதல் 2024 வரை இதே பாணியில் பதிவான கொலை வழக்குகளின் விவரங்களை பெற்று ஏதும் தொடர்பு உள்ளதா என புலன் விசாரணை தொடர்கிறது. இது தவிர தமிழகம் முழுதும் கொலை செய்து கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 850 பேரின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.