திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்: தமிழிசை DrTamilisai | BJP | Senior leader| X Page| VCK| TVK|
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும்: தமிழிசை DrTamilisai | BJP | Senior leader| X Page| VCK| TVK| எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நூலை வெளியிட்டு பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக, பாஜவை கடுமையாக விமர்சித்தார். விசிக தலைவர் திருமாவளவன் இந்த விழாவுக்கு வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எந்தளவுக்கு பிரஷர் கொடுக்கப்பட்டிருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஆனாலும் அவரது மனம் நம்முடன்தான் இருக்கும் என விஜய் பேசியது தமிழக அரசியலில் மீண்டும் பேசு பொருளானது. விஜயின் பேச்சு பற்றி திருமாவளவன் விளக்கம் அளித்தார். அழுத்தம் கொடுத்து இணங்க கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இல்லை என்றார். திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார். நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சை சுட்டிக்காட்டி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் சேர்ந்து பங்கேற்றால் திமுக கூட்டணியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என திருமாவளவன் சொல்கிறார். ஆனால், அவரது கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது, திருமாவளவன் இந்த விழாவில் இல்லை; ஆனால், அவருடைய மனசாட்சி இங்குதான் இருக்கிறது என சொல்கிறார். இது திருமாவளவனின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. விஜய் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழா மேடையில் ஒரு வேடமும், இண்டி கூட்டணியில் ஸ்டாலினுடன் இன்னொரு வேடமும் அவருக்கு இருக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடு தமிழகத்தில் இண்டி கூட்டணி வலுவாக இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. அறிவாலய கூட்டணியில் பிளவு ஏற்படும் என்பதை நம்மால் காண முடிகிறது. திருமாவளவனின் உண்மையான நிறமும் விரைவில் வெளிப்படும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.