விழுப்புரம் போராட்டத்தில் பரபரப்பு சம்பவம் woman threatened by dmk
விழுப்புரம் போராட்டத்தில் பரபரப்பு சம்பவம் woman threatened by dmk partymen Villupuram rain people protest Vikravandi mla Anniyur Siva rain water stagnation விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கொய்யா தோப்பு, பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகள் சமீபத்தில் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் புடைசூழ வந்த விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். எம்எல்ஏ அன்னியூர் சிவா வரும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தன்னை திமுக பிரமுகர் மிரட்டியதாக பெண் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். உடனே அங்கு வந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், போ போலீசில் போய் புகார் கொடு என கூறினார். தனிப்பட்ட பிரச்னையை ஏம்பா பேட்டி எடுக்கற என கேமராமேனை பார்த்து சொன்னார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறியபிறகே மக்கள் கலைந்து சென்றனர்.