உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிபர் ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்த கதை Syria President Bashar al-Assad

அதிபர் ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்த கதை Syria President Bashar al-Assad

அதிபர் ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்த கதை Syria President Bashar al-Assad Prime Minister Mohammad Ghazi al-Jalali Hayat Tahrir al-Sham rebel group Abu Mohammed al-Julani மேற்காசியாவில் உள்ள நாடு சிரியா. அதிபர் பஷர் அல்- ஆசாத் 2000 ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறார். 2011ம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் பஷர் அல்- ஆசாத், ரஷ்யா, ஈரான் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால் அவரது ஆட்சியை ஒழித்துக்கட்ட அமெரிக்காவும், துருக்கியும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டன. சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்தும், ஆயுதங்களை கொடுத்து உதவியும் உள்நாட்டுப் போரை தூண்டி விட்டன. இதனால் சிரியாவில் 2011ல் துவங்கிய உள்நாட்டுப்போர் இன்று வரை தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. அல்குவைதாவின் Al-Qaeda பிரிந்து சென்ற ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் Hayat Tahrir al-Sham என்ற அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்திஷ் அமைப்பினரும் சிரியா நாட்டின் அரசு படைகளுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 2015ல் உள்நாட்டு போர் தீவிரமானது. அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் நிலை ஏற்பட்டது. அப்போது, சிரியாவுக்கு உதவ ரஷ்ய ராணுவம் நேரடியாக களம் இறங்கியது. ரஷ்யாவின் முப்படைகளும் கிளர்ச்சி படைகள் மீது தாக்குதலை தொடங்கின. சிரியாவின் அரசு படைகளுடன் ரஷ்ய படைகளும் சேர்ந்ததால் சமாளிக்க முடியாமல், கிளர்ச்சிப் படையினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்சி தோல்வியுற்றது. கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானும் இஸ்ரேல் உடனான மோதல் காரணமாக, படைகளை அனுப்ப முடியாத சூழலில் உள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக போரிட்டு வந்த ெஹஸ்புலா படைகளும் இஸ்ரேல் தாக்குதலில் கடுமையான பின்னடைவை சந்தித்தது. இதனால் அதன் படைகளும் சிரிய அரசு படைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அரசு படைகளுக்கு எதிரான தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தினர். அதிபர் ஆசாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் படைகள், துருக்கி ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் தாக்குதலை தொடங்கியது. அதன் காரணமாக, முதலில் தாரா Daraa மாகாணத்தை கிளர்ச்சிப்படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அதைத் தொடர்ந்து சிரியாவின் 2வது பெரிய நகரான அலெப்போ மற்றும் ஹமா நகரங்களையும் கிளர்ச்சிப்படைகள் பிடித்தன. நேற்று தலைநகர் டமாஸ்கஸ்க்கு அருகில் உள்ள ேஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சிப்படைகள் வேகமாக முன்னேறின. வான்வழி தாக்குதல் நடத்தி தடை செய்ய முயன்ற அரசு படைகளை கிளர்ச்சிப்படைகள் துவம்சம் செய்தன. தாரா, அலெப்போ, ஹமா, ேஹாம்ஸ் என அடுத்தடுத்து முக்கிய நகரங்கள் கிளர்ச்சிப்படைகள் கட்டுப்பாட்டில் போனதால், சிரிய மக்கள் பதற்றமடைந்தனர். . இதனால் கிளர்ச்சிப்படைகளுக்கு ஆதரவான மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்கள் ஓடத் துவங்கினர். ேஹாம்ஸ் நகரை பிடித்தபிறகு கிளர்ச்சிப் படைகள் தலைநகர் டமாஸ்கசை நோக்கி வேகமாக முன்னேறின. கிளர்ச்சிப்படைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரியா அரசு படையினர், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். சில இடங்களில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, டமாஸ்கஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுபடை வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். டமாஸ்கஸ் நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள நகரங்களில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்த ெஹஸ்புலா அமைப்பினரும் தங்கள் நிலைகளை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிப் படையினர் டமாஸ்கஸ் நகரில் நுழைந்ததும், தலைநகர் தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக அதன் தலைவர் அபு முகமது அல் ஜுலானி அறிவித்தார். இதன்மூலம் சிரியாவில் சர்வாதிகார ஆட்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என அவர் கூறினார். அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து விமானத்தில் தப்பி விட்டார் என்றும் கிளர்ச்சிப்படைகள் அறிவித்தன. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும்விதமாக சிரியா நாட்டின் பிரதமர் Mohammad Ghazi al-Jalali முகமது காஜி அல் ஜலாலி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அரசு நிர்வாகத்தை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் படைகளிடம் ஒப்படைக்கத் தயார் என பிரதமர் ஜலாலி அறிவித்தார். டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சிப்படைகள் நெருங்கும்போதே அதிபர் அல் ஆசாத் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு தப்பிச் சென்றார் என்ற விவரம் இல்லை. ரஷ்யா அல்லது ஈரானுக்குத்தான் அவர் தப்பிச் சென்றிருக்க வேண்டும் எனவும் டமாஸ்கஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சிப்படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. கிளர்ச்சியாளர்கள் கைகளில் சிரியா சிக்குவதை அனுமதிக்கக்கூடாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சொன்னார். சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 2011ல் துவங்கி 14 ஆண்டாக நடந்து வரும் உள்நாட்டுப்போரால் சிரியாவில் இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளனர். சிரியாவின் போர்ச்சூழலை முன்கூட்டியே உணர்ந்து, சிரியாவுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்கும்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் கிடைக்கக்கூடிய விமானங்களை பயன்படுத்தி சீக்கிரம் சிரியாவை விட்டு வெளியேற வேண்டும்: அப்படி வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் டமாஸ்கஸ்சில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்து, ெஹல்ப் லைன் நம்பரையும் வெளியிட்டது. கார்டு டமாஸ்கஸ் இந்திய தூதரகம் இஹல்ப்லைன் -வாட்ஸ் அப் +963 993385973 இமெயில் hoc.damascus@mea.gov.in

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி