மாணவிக்கு நடந்த கொடுமை: சீறிய அண்ணாமலை | MK Stalin | Annamalai
சென்னை அயனாவரத்தில் 21 வயதான மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு நடந்த கொடுமைக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை ஏழு பேர் கொண்ட கும்பல் கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து மாணவியின் தந்தை சென்னை அயனாவரம் போலீசில் புகார் அளித்தும் குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால் தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கிறது.